English සිංහල
இப்போது விசாரிக்கவும்

RFC சேமிப்புக் கணக்குகள்


RFC சேமிப்புக் கணக்குகள் தமது பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வைப்புச் செய்வதற்கும் அதே நாணயத்தில் வட்டியை சம்பாதிப்பதற்கும் விரும்புகின்ற இலங்கை பிரஜைகளுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த சேமிப்புக் கணக்கு அமெரிக்க டொலர்கள், ஸ்டெர்லிங் பவுன்கள், அவுஸ்ரேலிய டொலர்கள் மற்றும் யூரோவிற்கு நீங்கள் விரும்பும் நாணயத்தில் செயல்படுவதற்கான தெரிவுடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை உறுதி செய்கிறது.

ஒரு நபருக்கு மிகக் குறைந்த மீதியான 100 அமெரிக்க டொலர்கள் அல்லது குறிக்கப்பட்ட நாணயங்களிலே அதற்கு சமமான தொகை பேணப்பட்டால் மட்டுமே நீங்கள் கூட்டுக் கணக்கொன்றைத் திறப்பதற்கான தெரிவைப் பெறுவீர்கள்.

  • உங்கள் கணக்கைப் பேணக்கூடிய குறிப்பிட்ட நாணயங்களின் தெரிவு.
  • குறைந்த பட்ச வைப்புத் தொகை 100 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு சமமான வேறு எந்த நாணயத்திலும்.
  • அதிக வட்டி வீதத்துக்கு ஒரு சேமிப்புக் கணக்கிற்கும் அல்லது ஒரு சூப்பர் சேமிப்புக் கணக்கிற்கும் இடையேயான ஒரு தேர்வு.
  • வட்டியானது நாளாந்த இருப்பின் மீது கணக்கிடப்படுவதோடு மாதாந்தம் செலுத்தப்படுகின்றது.
  • அனுமதிக்கப்பட்ட கடன்கள் என்பது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆதரவாக பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் உள்வரும் பணம் அனுப்புதல், NRFC/RFC கணக்குகளில் இருந்து நிதியை மாற்றுதல், மூலத்தை வெளிப்படுத்தல் மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் நிதிக்காக வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்படும் வட்டி என்பவற்றுக்கிணங்க கணக்கு வைத்திருப்பவரால் பெறப்படும் வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றைக் குறிக்கும்.
  • உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் எந்தவொரு வீஸா ATM வலைப்பின்னலிலும் பயன்படுத்தப்பட முடியுமான இலவசமான ATM அட்டை.
  • சாதாரண கட்டணத்தில் மெஸ்ட்ரோ சர்வதேச பற்று அட்டையினை (Maestro international debit card) பயன்படுத்த முடிதல்.
  • 60+ சேவை நிலையங்கள் அதனுடன் 450+ கொமர்ஷல் வங்கி நிலையங்கள் இவற்றுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச VISA ATM வலைப்பின்னல் என்பவற்றுடனான பரந்த அளவில் சேவையினை பெற்றுக்கொள்ளும் வசதி.
  • நடைமுறை சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு வெளிநாடுகளுக்குப் பணத்தை அனுப்புவதற்காக, கணக்கு பேணப்படுகின்ற வங்கி அல்லது கம்பனி வேறுபாடின்றி ஒரு RFC கணக்கிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவதற்காக மற்றும் இலங்கை ரூபாவில் இலங்கையில் பணம் செலுத்துவதற்காக கணக்கிற்கான கடன் பற்று இலவசமாக அனுமதிக்கப்படுகின்றது.

RFC நிலையான வைப்புக்கள்


LOLC ஃபினான்ஸ் நிறுவன RFC நிலையான வைப்புடன் எமது நன்கு பலராலும் அறியப்பட்ட உறுதியான மற்றும் வலிமை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் அந்நிய செலாவனி மீது கவர்ச்சிகரமான வருமானங்களை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் காலப் பிரிவிற்கு நீங்கள் தெரிவு செய்யும் நாணயத்தில் உங்கள் நிலையான வைப்பினை இங்கு உங்கள் தெரிவு எதுவாக இருப்பினும் உங்கள் இலக்கினை நீங்கள் அடைந்து கொள்வதற்கு LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தில் நாம் எப்போதும் காத்திருக்கின்றோம்.

  • உங்கள் கணக்கை பராமரிக்கக் கூடிய குறிப்பிட்ட நாணயங்களைத் தெரிவு செய்தல்.
  • மிகக் குறைந்த வைப்பாக 100 டொலர்கள் அல்லது ஏனைய குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் சமமான தொகை.
  • 60+ சேவை நிலையங்களைக் கொண்ட பரந்த சேவை.
  • சிறப்பு சலுகைக்கான அனுகலை உங்களுக்கு வழங்குவதற்காக RFC சேமிப்பு கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டி வட்டி அனுப்பப்படும்.
  • முதிர்வு நிலையில் வட்டி பெறப்படும்.