தமி
LOLC ரியல் டைம் ஆனது விருது வென்ற ஒரு மொபைல் மற்றும் இணைய வங்கிச் சேவையாகும். இது LOLC ஃபினான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்புதல் மற்றும் பெற்றுக்கொள்ளலினை CEFT (Common Electronic Fund Transfer Switch) மற்றும் SLIPS (Sri Lanka Interbank Payment System) என்பவற்றினூடாக உடனடியாக மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இச்சேவையானது மிக விரைவானதாகவும், இலகுவானதாகவும் மற்றும் பாதுகாப்பானதுமாக காணப்படுவதுடன் அதிக சௌகர்யமான இது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆன்லைன் கொடுப்பனவு களத்தினை வழங்குகின்றது.
LOLC ரியல் டைம் சேவையினூடாக, உங்கள் பாவனை பட்டியற் கொடுப்பனவுகளையும் எதிர்கால திகதியொன்றில் செலுத்தப்பட வேண்டிய அட்டவணைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளயும் மேற்கொள்ள முடியும். இச்சேவையானது LOLC லீசிங் மற்றும் இன்ஷூரன்ஸ் கொடுப்பனவுகளை செலுத்தும் வசதியினையும் வழங்குகின்றது. LOLC சேமிப்புக் கணக்கின் மீதான எந்தவொரு பெறுமதிக்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் பூச்சிய செலவில் மேற்கொள்ள முடியும் என்பதுடன் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.
LOLC ரியல் டைம் சேவையினை பதிவுசெய்துகொள்வதற்கு நாடு பூராகவுமுள்ள LOLC ஃபினான்ஸ் கிளைகளில் ஏதேனுமொன்றிற்கு விஜயம் செய்யுங்கள். ஒருமுறை பதிவு செய்யப்பட்டதும், Android சாதனங்களுக்கு Play Store இலும் அல்லது Apple சாதனங்களுக்கு App Store இலும் LOLC ரியல் டைம் அப்பினை தரவிறக்கம் செய்து இச்சேவையினை பயன்படுத்த முடியும்.
LOLC சேமிப்புக் கணக்கிகுகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
எந்தவொரு பெறுமதிக்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் பூச்சிய செலவு
7 நாட்களும் தொழிற்படும் 24 மணி நேர LOLC ரியல் டைம் மற்றும் ATM பதிவுகள் மற்றும் ஏனைய விசாரணைகள்
அனைத்து LOLC கணக்குகளையும் இலகுவாக பராமரிக்க முடியும்
ரியல் டைம் கட்டணக் கொடுப்பனவுகள் மற்றும் எதிர்காலக் கொடுப்பனவுகள்
எவ்விடத்திலும் செயற்படுத்தக்கூடிய 7 நாட்களும் தொழிற்படும் 24 மணி நேர சேவை