“வகாலா” கோட்பாட்டின் விதிகளின்படி, வாடிக்கையாளர் (நிதி கோருபவர்) நிதி நிறுவனத்தின் (அல்-பலாஹ்) முகவர் ஒருவராக நியமிக்கப்படுவார். வகாலா ஒப்பந்தத்தில் இணங்கியவாறு இலாபத்தை ஈட்டுவதற்கு முதலீடு செய்யப்பட்ட நிதியானது, ஷரீஆவிற்கு இயைபான வணிக நடவடிக்கைகளிலேயே பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே மேற்படி முகவர் நியமிக்கப்படுவார். வகாலா ஒப்பந்த்த்தில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க குறுகிய தவணை நிதி முகவருக்கு வழங்கப்படும். முதலீட்டுடன் கூடிய அதற்கான மீளப் பணம் செலுத்தும் வழிமுறைகள் மற்றும் இலாப வருமானங்களைப் பொருத்தவரை தளர்வானவையாகவே காணப்படும்.
இம்முறைமையானது குறுகிய கால வணிக மற்றும் செயற்படு மூலதன தேவைப்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.