முசாவமாஹ் என்பது மாற்று நிதி வழங்களின் ஒரு வடிவமாகும். இதன் கீழ் வாங்குபவருக்கும் விற்பவருக்குமிடையிலான பேச்சு வார்த்தைகள் விற்பவர் தனது விலையினை வெளியிடுவதை அல்லது கேட்பதைத் தவிர்க்கும். பேசப்படும் பொருள் குறித்த முழுமையான அறிவு விற்பனையாளருக்கு இருக்க முடியும்; அல்லது அல்லாதிருக்க முடியும். பேச்சு வார்த்தை செயன்முறையின் பகுதியாக விலையை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு அவருக்கு இல்லை. விற்பவரின் கடமையில் உள்ள வேறுபாடே முராபஹாவிற்கும் முஸாவமாவிற்குமிடையிலான பிரதான வேறுபாடாகும். இது தவிர முராபஹாவிலே குறிப்பிட்ட ஏனைய அனைத்து விதிகளும் முஸாவமாவிற்கும் பொருந்தும்.