English සිංහල
இப்போது விசாரிக்கவும்

இஜாராஹ


 

எமது அனைத்து நிதிசார் தயாரிப்புக்களும் முறைப்படியான கடன் வழங்கும் பொருட்களின் செயற்படுதன்மையை வழங்குகின்ற அதேவேளை, மாற்று நிதி கொள்கைகள் மற்றும்  தேவைப்பாடுகளுக்கு இணங்க வடிவமைக்கப்படுகின்றன. “இஜாராஹ்” என அறியப்படும் மாற்று குத்தகை வழங்கலானது, சம்பிரதாயபூர்வமான குத்தகை வழங்கும் கோட்பாட்டிற்கு மாற்றமானதாகும். இது ஒரு உடன்படிக்கையாகவே கையாளப்படுகின்றது. இதங்கீழ் குறித்தவொரு சொத்தானது பொருட்களை பாவனை செய்வதற்காக இணக்கம் காணப்பட்ட வாடகைத் தொகைக்கு வாடகைக்கு விடப்படும். ‘அல்-பலாஹ்’ வானது நீங்கள் தெரிவு செய்யும் சொத்தைக் கொள்வனவு மூலம் அது உங்களது மூலதனச் செலவுப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது. குத்தகைக் காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் அப்பொருள் மீதான சேதாரம் தொடர்பான நட்ட ஈட்டு ஒப்பந்தமும் இதில் மேற்கொள்ளப்படும்.

ஆதனத்தின் உரித்து ‘அல்-பலாஹ்’ விடம் காணப்படும் போதும், எமது குத்தகையின் பயனை நீங்கள் அனுபவிப்பதுடன் ஆதனம் உங்களது உடைமையிலேயே காணப்படும். ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட வாடகைக்காலம் முடிவுறும் போது, அல்-பலாஹ்விற்கான உங்களது கடப்பாடுகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருந்தால் நாம் சொத்தினை நாம் அவ்வாதனத்தினை உங்களுக்கே வழங்குவோம். இதன்மூலம் அதன் முழுமையான உரித்தினை நீங்கள் பூரணமாக அனுபவித்திட முடியும்.

  • சிக்கனமான வாடகை
  • சொத்தின் பெறுமதியில் 70% வரையில் ஃபினான்ஸ் செய்யப்பட முடியும்.
  • இச்சேவையானது பதிவு செய்யப்படாத மற்றும் புதிய வாகனங்கள் அத்துடன் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் என்வ்வற்றிற்கு மிகவும் பொருத்தமானதாகும்.