டிமினிஷிங் முஷாரகாஹ்வானது ஒரு பல்துறை நிதிக் கருவியாகும். உங்கள் வணிக முயற்சியொன்றினை ஆரம்பிப்பதற்காக அதன் தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு தேவையான நிதிசார் பங்களிப்பினை அல்-பலாஹ்வினூடாக உங்களுக்கு வழங்குவதில் நாம் உங்களுடன் கைகோர்ப்போம். திட்டவட்டமாக இது ஒரு நிதிசார் பங்காண்மையாகும். இரு பங்காளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீட்டெடுக்கும் பொறிமுறைக்கு அமைவாக மற்றைய பங்காளரின் பங்குகளை கொள்வனவு செய்யும் பங்காளருக்கு முழுமையான உரித்துடைமையினை இது வழங்கும். இதற்கமைவாக, LOLC ஃபினான்ஸ் நிறுவனமானது ஆதனமொன்றினை கொள்வனவு செய்வதற்காக மற்றும் / அல்லது உங்கள் தெரிவில் செயற்திட்டமொன்றில் முதலீடு செய்வதற்காக உங்களுடன் பங்காண்மையொன்றில் இணைந்து கொள்ளும், இதனடிப்படையில் அதன் அதன் இணை உரிமையாளராகும்.
செயற்திட்டத்தின் உரிமையாண்மையானது இரு திறத்தவர்களினதும் நிதிசார் பங்களிப்பின் மீது பிரதிபலிக்கும், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலப்பகுதியொன்றில் இடம்பெறும், ஆதனத்தின்/செயற்திட்டத்தின் எமது பங்குகளை காலத்திற்கு காலம் கொள்வனவு செய்வதற்காக உங்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட வீதாசாரத்திற்கு அமைவாக LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தினால் உடைமை கொள்ளப்பட்ட அனைத்து பங்குகளையும் சுவீகரிப்பதற்கு இது வழிவகுக்கும். தவணைப்பணங்களானவை ஒரு முறை செலுத்தி முடிக்கப்பட்டதும், சொத்தானது பூரணமாக உங்களுக்கே சொந்தமாகும். இதனையடுத்து டிமினிஷிங் முஷாரகாஹ்வினது இலக்கு அடையப்பட்டதாகக் கொண்டு பங்காண்மையானது கலைக்கப்படும்.