தமி
LOLC ஃபினான்ஸ் PLC மற்றும் LOLC (கம்போடியா) PLC ஆகியவற்றின் சபைகளின் தவிசாளர் திரு. பிரின்ட்லி டீ சில்வா ஆவார். அத்துடன் இவர் வரையறுக்கப்பட்ட LOLC மியன்மார் மைக்றோ ஃபினான்ஸ் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளரும் ஆவார்.
இவர் 2003 தொடக்கம் 2015 வரை LOLC குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், 2017/18 காலப்பகுதியில் LOLC மைக்றோ கிறடிட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். LOLC குழுமத்துடன் இணைவதற்கு முன்னர், 1984 முதல் இலங்கையின் வங்கியல்லா நிதிச் சேவைகள் துறையில் (NBFI) உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் விசேடத்துவமிக்க குத்தகை கம்பனிகள் ஆகிய இரண்டிலும் சபை மற்றும் பொது முகாமைத்துவத்தில் பதவிகளை வகித்துள்ளார்.
இவருக்கு வங்கியல்லா நிதிச் சேவைகள் துறையில் (NBFI) சந்தப்படுத்தலும் விற்பனையும், கடன் வழங்கலும் மீட்பு முகாமைத்துவமும் மற்றும் நிதி ஆகியவற்றினை உள்ளடக்கிய பரந்த நிபுணத்துவ அறிவும் அனுபவமும் உண்டு. திரு. டீ சில்வா, Sri Lanka Institute of Credit Management இனது உறுப்பினராக 2010 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் அதன் கௌரவ செயலாளராக சேவையாற்றியுள்ளார். அத்துடன் இவர் Council of Management of the Finance Houses Association of Sri Lanka இனது உறுப்பினராக ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றியுள்ள அதேவேளை இவற்றும் நான்கு ஆண்டுகள் உப தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.
Financial Ombudsman Sri Lanka (Guarantee) Limited இனது பணிப்பாளராகவும் இவர் சேவையாற்றியுள்ளார். இப்பதவிகளானவை 2015 இல் துறக்கப்பட்டன. அங்கவீனமுற்றோர்களுக்கு சேவையாற்றிவரும் தங்கால்லையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான Navajeevana Rehabilitation இனது நிறைவேற்றுத் தத்துவமல்லா பணிப்பாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரு. கென்றாட் டயர்ஸ் அவர்கள், 2020 மார்ச் 1ஆம் திகதியன்று சபைக்கு நியமிக்கப்பட்டார். இவர் ஐக்கிய இராஜ்யத்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் பட்டய முகாமைத்துவ கணக்காளர்களின் சக உறுப்பினரும் (FCMA), பட்டம்பெற்ற உலகளாவிய முகாமைத்துவ கணக்காளரும் (CGMA -USA)ஆவார்.
இவர், இலங்கையின் சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (FCMA) மற்றும் பிரிடிஷ் கணனி சங்கத்தின் சக உறுப்பினரும் ஆவார். வியாபார தொழில்நுட்பத்தில் தொலைநோக்குமிக்க சிந்தனையடைய தலைவராக இவரது அனுபவம் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் விரிந்தசெல்வதுடன் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட உயர் அந்தஸ்த்து பதவி அனுபவத்தையும் கொண்டவராவார். இவர், வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவம், மென்பொருள் பொறியியல், கருத்திட்ட முகாமைத்துவம், உபாய மற்றும் முதலீட்டு திட்டமிடல், நிதி முகாமைத்துவம், நிறுவன மீள்கட்டமைப்பு, யுனிட் ட்ரஸ்ட் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்றவற்றில் பல வருட அனுபவமிக்கவர். தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், வங்கித்தொழில் மற்றும் நிதி, காப்புறுதி, நிதிச் சொத்துப் பட்டியல்/ சொத்து முகாமைத்துவம் மற்றும் தயாரித்தல் போன்ற துறைகளில் இவர் நிபுணத்துவத்தை கொண்டுள்ளார். பல நிதியியல் தொழில்நுட்ப உற்பத்திகளையும் தீர்வுகளையும் கண்டுபிடித்த இவர், நிதியியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமிக்கவராவதுடன் கொடுப்பனவுகளை தாண்டிய புரட்சிகரமிக்க தளமான iPay இன் நிறுவுநரும் இவரே என்பதுடன் ஒவ்வொரு நாளையும் சம்பளம் உழைகின்ற நாளாக ஆக்குகின்ற மற்றொரு நிதியியல் தொழில்நுட்பத் தளமான OYES இன் தாபகரும் இவரே ஆவார்.
தொழில்நுட்பம் மீதான சிந்தனை மிக்க தலைமைத்துவமும் தொழில்துறைக்கும் சமூகத்திற்குமான அத்துடன் LOLC குழுமத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் பங்களிப்பும் 2016ஆம் ஆணடின் கௌரமிக்க Computer Society of Sri Lanka CIO விருது உள்ளடங்கலாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை பட்டய முகமைத்துவ நிறுவனத்தின் Professional Excellence Award 2017 இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், Global CIO Hall of Fame 2020 of IDG CIO100 நிகழ்வுக்கும் இவர் எற்றுக்காள்ளப்பட்துடன் இப் பாராட்டினை பெற்ற ஒரே ஒரு இலங்கையரும் ஆவார். இவர் முன்னால் குழும பிதரம தகவல் அலுவலரும் தற்போதய LOLC டெக்நோலோஜிஸ் லிமிடெட்டின் தலைவாரகவும் செயற்படுகின்றார். பிரபல்யமாக PickMe என அறியப்படுகின்ற டிஜிடல் மொபிலிடி பிரைவட் லிமிடெட் இன் தாபக சபை உறுப்பினராகவுமுள்ளர். மேலும் வெற்றிகரமான தொடக்க தொலைமருத்தவ தளமான ஓடொக் பிரைவட் லிமிடெட் பணிப்பாளராகவும் வெளிநாட்டு துணைக் கம்பனிகளில் வேறு பணிப்பாளர் பதவிகளையும் வகிக்கின்றார்.
திருமதி கல்ஷா அமரசிங்க பொருளியலில் இளமானிப் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்துள்ளதுடன் முதலீடுகள் தொடர்பில் மிகச்சிறப்பான நோக்கினையும் கொண்டுள்ளார். Browns Group of Companies மற்றும் LOLC Holdings PLC ஆகிய துணை நிறுவன்ங்களின் சபைகளில் இவர் சேவையாற்றுகின்றார்.
இவர் வகித்த ஏனைய முக்கிய பதவிகள் : நிறைவேற்றுப் பணிப்பாளர் - LOLC Holdings PLC, LOLC Finance PLC, LOLC Life Assurance Limited, Palm Garden Hotels PLC, Riverina Resorts (Pvt) Ltd., Eden Hotel Lanka PLC, Brown & Co. PLC, Browns Investments PLC, Browns Capital PLC, Green Paradise (Pvt) Ltd., Sun & Fun Resorts Ltd. மற்றும் Browns Holdings Ltd.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உத்தியோகத்தராக திரு. விஜேரத்னவிற்கு கணக்கீடு, நிதிசார் அறிக்கையிடல், உள்ளக நிதிகளின் முதலீடு, வெளி நாட்டுகடன் செலவினங்கள் மற்றும் மீள் கொடுப்பனவுகள், கணக்காய்வு மற்றும் நிர்வாகம் போன்றவற்றில் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவமுள்ளது.
இவர் 1991 இல் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்துகொண்டதுடன் நிதி, பொதுமக்கள் கடன் முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகள் என்பவற்றில் 2016 2016 இல் இவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார் என்பது குறிப்பிட்த்தக்கது.
இவர் களனி பல்கலைக்கழகத்தில் பொருளியல் (விசேட துறை – வர்த்தகம்) இளமானிப் பட்டத்தினை பெற்றவர் என்பதுடன் கணக்கீடு மற்றும் நிதிசார் பொருளியலில் பட்டப் பின் படிப்பில் டிப்ளொமா சான்றிதழினையும் பெற்றுள்ளார். அத்துடன் இவர் இங்கிலாந்தின் Essex பல்கலைக்கழகத்தில் கணக்கீடு மற்றும் நிதிசார் பொருளியலில் முதுமானிப் பட்டத்திற்கான கற்கை நெறியிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. கே சுந்தரராஜ் அவர்கள் கணக்ககீடு, கணக்காய்வு மற்றும் வரி ஆலோசனை போன்ற துறைகளில் 27 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவாராவார். இவர் தனது தொழிலை 1998 இல் பட்டயக் கணக்காளரொருவராகத் தொடங்கியதுடன் தற்போது அமரசேகர அன்ட் கம்பனி என்ற பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வரிப் பங்காளாரக பணியாற்றுகின்றார்.
திரு. கே சுந்தரராஜ் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராவதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிதியில் வியாபார நிருவாக முதுமானிப்பட்டத்தையும் பெற்றவராவார்.